
Carrom Singles Rules
1🟢நாணய சுழற்ச்சியில்(Toss) வெற்றிபெறுபவர்,தங்களுக்குரிய ஆட்டத்தையோ அல்லது இருக்கையையோ தேர்வு செய்யலாம்.
2🟣ஒற்றையர் ஆட்டத்தில், எந்த ஒரு காய்களுக்கும் கட் என்பது இல்லை.
3🔵விளையாடும் வீரர்கள் நடுவரின் அனுமதி இன்றி போட்டி ஆரம்பித்தபின்னர் எக்காரணத்தைக்கொண்டும்,📵தொலைபேசிபாவிப்பதோ/🚷எழுந்து கொள்வதோ தவிர்க்கப்படவேண்டும். (அனுமதி பெறவேண்டும்) அனுமதி இன்றி நீங்கள் எழுந்தால், நீங்கள் விளையாடும் அப்போட்டி மட்டும் எதிராளிக்கு வெற்றி கொடுக்கப்படும்.
4🟢நீங்கள் விளையாட தொடங்கும் முன்பு உங்கள் இருக்கைகளை சரிபார்க்கவும். விளையாட ஆரம்பித்த பின்னர் எக்காரணம் கொண்டும் உங்கள் இருக்கையை நகர்த்த முடியாது என்பது விதி.உங்களின் ஆடும் வாய்ப்பு வரும் சந்தர்ப்பத்தில், உங்களது இருக்கை நகர்ந்ததாக நடுவரால் இனம் கண்டு கொண்டால், நீங்கள் ஆடும் வாய்ப்பை இழந்து, ஆட்டம் மறு அணிக்கு செல்லும்.
5🟡நீங்கள் ஆடும் போது, எந்த கையால் ஆடுகிறீர்களொ அந்தக்கை மட்டுமே போர்ட்டில் படமுடியும்.சம நேரத்தில் மறு கையும் போர்ட்டில் பிடித்து கொண்டு இருந்தால், நீங்கள் ஆடும் வாய்ப்பை இழந்து ஆட்டம் மறு அணிக்கு செல்லும்.
6🟤எதிரணியினர் அடித்ததும் நீங்கள் தாமதிக்காமல் disk ஐ எடுக்கவேண்டும். எடுத்ததில் இருந்து ⏱20 வினாடிகளுக்குள் நீங்கள் விளையாட வேண்டும்.அப்படி விளையாட தவறினால், தண்டனையாக ஆட்டம் மறு அணிக்கு செல்லும்.
7🟣போட்டியாளர்கள், எதிரணியினரின் காய்களை,நேரடியாக தாக்கிவிளையாட முடியாது. ஆனால் அவர்களின் காயால் கரம்பண்ணி உங்கள் காய்க்கோ அல்லது Queen ற்கோ அடிக்க இயலும். எதிரணியின் காயை நேரடியாக அடித்து ஏதேனும் ஒரு காயில் அவர்களது காயோ அல்லது disk ஓ படாத சந்தர்ப்பத்தில் தண்டனையாக, உங்களது ஒரு காய் வைக்கப்படும்.
8🔴நடுவட்டத்திற்குள் வைக்கப்படும் காயானதை,ஒரு முறை வைத்து கையை எடுத்தால் பின்னர் அதை நகர்த்த முடியாது. அதே நேரம், நடுவில் இருக்கும் வட்டத்தின் விளிம்பில் இருக்கும் கறுப்பு வட்டத்திலும்(queen இருக்கும் இடத்தில்) நீங்கள் வைக்கும் காய் உரசிக்கொண்டு இருக்க கூடாது. அப்படி ஏதும் நிகழ்ந்தால், தண்டனையாக உங்களின் ஒரு காய் வைக்கப்பட்டு, ஆட்டம் அடுத்தவருக்கு செல்லும்.தண்டனைக்கான காய்கள் வைக்கப்படும் போது, எச்சந்தர்ப்பத்திலும் ஒன்றுடன் ஒன்று உரசக் கூடாது. இதுவும் ஒரு தண்டனைக்குரிய செயலாகும்.
9🟣Disk ஐ வைக்கும் போது இரண்டு கறுப்புக்கொட்டில் முட்டும் வண்ணம் வைத்தல் வேண்டும்.
10⚫நீங்கள் அடிக்கும் போது காயோ/disc boardஐ விட்டு வெளியெ பறந்தால்,நீங்கள் தொடர்ந்து விளையாடும் தகுதியை இளப்பீர்கள்.
11🔵போட்டி ஆரம்பித்தபின்னர், board இல் powder போடுவதாயின்,எதிரணியினர் சம்மதித்தால் மட்டுமே நீங்கள் powder போடலாம்.
12⚫கடைசிக்காய் போடும் போது, நீங்கள் disk ஐயும் சேர்த்துப்போட்டால்,அந்த ஆட்டம் முடிவுறாது.அதற்கு தண்டனையாக உங்களது ஒரு காய் எடுத்து வைக்கப்பட்டு ஆட்டம் அடுத்தவருக்கு செல்லும்.
13💜குழுநிலைப் போட்டிகள் யாவும் points அடிப்படையில் வெற்றி தோல்வி நிர்மாணிக்கப்படும்.
14🧡குழுநிலைப் போட்டிகள் யாவும் Single match எனும் அடிப்படையில் போட்டிகள் நடைபெறும். கால் இறுதிச்சுற்று, அரை இறுதிச்சுற்று, இறுதிச்சுற்று ஆகியவை மட்டுமே Best of Three எனும் அடிப்படையில் நடைபெறும்.(இது விதிமுறைகளுக்குள் அடங்காது, போட்டி நடாத்தும் அமைப்பே முடிவு செய்யும்)
15🌞 புள்ளிகள் 🌞
✅யார் போட்டியை முதலில் முடித்து வெற்றி பெறுகிறார்களோ, அவருக்கு,தலா 3 புள்ளிகள் வழங்கப்படும். அத்துடன், அவர்கள் முடிக்கும் போது எதிரணியின் எத்தனை காய்கள் board இல் இருக்கின்றதோ, அதையும் கணக்கில் வைப்போம். தோற்கும் அணிக்கும், அவர்கள் எத்தனை காய்களில் தோல்வியைத்தழுவுகிறார்களோ,அப் புள்ளிகள் மைனஸ்(-) என்று அவர்கள் கணக்கில் வைப்போம்.
16✳ குறிப்பு:-
ஒரு group இல் இரண்டுக்கு மேற்பட்ட வீரர்கள் சமபுள்ளிகள் பெறும் சந்தர்பத்தில்,boardல் பெறப்பட்ட காய்களின்/புள்ளிகளின் அடிப்படையைக்கொண்டு ஒரு வீரர் தெரிவு செய்யப்படுவார். அத்துடன் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட வீரர்கள் சம்புள்ளிகள் பெறும் சந்தர்பத்தில் மீழ் போட்டி நடைபெற்று வெற்றியாளர் தெரிவு செய்யப்படும்.
17♓ நீங்கள் அடிக்கும் போது pocket இற்குள் காய்கள் அதிகமாகி இருக்கும் சந்தர்ப்பத்தில், உங்கள் disk போய் காய்களில் முட்டிக்கொண்டு நின்றால்(உள்ளே விழுந்ததோ இல்லை யோ என்று தெரியாமல் இருக்கும் பட்சத்தில்,அவ் disk ஐ போட்டியாளர்கள் யாரும் எடுக்க முடியாது,ஆனால் நடுவர் மட்டும் தான்(disk ஐ தொடாமல்) அந்த disk ஐ பார்த்து தனது தீர்ப்பை சொல்ல வேண்டும், அந்த disk ஆனது உள்ளேயா அல்லது வெளியேயா என்று.
18❄போட்டியை முடிக்கும் போது disk கண்டிப்பாக board இல் இருந்தே ஆக வேண்டும்.
🛑 தண்டனைக்குரிய செய்கைகள்.🛑
❌ எல்லோரும் மிகவும் கவனமாக பின் வருவனவற்றை மனதில் நிறுத்திக்கொள்ளவும்.
19🔴ஆட்டத்தின் இறுதி கட்டத்தில் இருவரும் தலா ஒரு காய் வைத்திருக்கும் சந்தர்ப்பத்தில், நீங்கள் Queen ஐ போட்டு பின்னர் உங்களது காயைப் போட்டு முடித்தால் அந்த ஆட்டம் உங்களுக்கு வெற்றியை தரும்.அதே சந்தர்ப்பத்தில், நீங்கள் Queen ஐ போட்டு பின் எதிராளியின் காயைப் போட்டால், அந்த ஆட்டம் எதிராளிக்கு வெற்றியை கொடுக்கும்.
20⚫ஆட்டம் ஆரம்பித்த பின்னர்,boardல் உள்ள காய்களை யாராவது தொட்டாலோ/நகர்த்தினாலோ குற்றம் ஆகும்.
21⛔ உங்களது கடைசிக்காய்க்கு நீங்கள் நேரடியாக அடிக்க முடியாது. அதுவும் ஒரு குற்றமாகும்.அதற்கு தண்டணையாக இரண்டு காய்கள் வைக்கப்படும்.
22🟤ஒருவர் விழையாடிய பின்னர் disk ஐ எடுக்கும் போதோ/கொடுக்கும் போதோ boardல் உள்ள காய்கள் நகர்த்தப்படும் பட்சத்தில் அதுவும் குற்றம் ஆகும்.
23🔴Boardல் queen இருக்கும் பட்சத்தில் இறுதிக்காய்க்கு மட்டும் எவரும் நேரடியாக அடிக்கமுடியாது.
24🟢இரண்டு காய்கள் உள்ள போது மட்டும் தான் queen ஐ pocket செய்ய முடியும். 2 காய்களுக்கு மேல் இருக்கும் பட்சத்தில், தவறுதலாக queen ஐ pocket பண்ணபடுமயின் அதுவும் குற்றம்.
25🔵 எதிராளியின் 2 காய்கள் இருந்து அவர் queen ஐ விளையாடும் போது, உங்களிடம் இரண்டிற்கும் மேற்பட்ட காய்கள் இருந்தால் நீங்கள் Queen ஐ விளையாட முடியாது.அப்படி உள்ள சந்தர்ப்பத்தில்,queen ஐ நேரடியாக அடித்தால் அதுவும் குற்றமாகும்.
26🔴உங்களுக்கு 2க்கு மேற்பட்ட காய்கள் இருக்கும் சந்தர்ப்பத்தில், Queen ஐ நீங்கள் உங்களின் மட்டைக்கு கொண்டு சென்றிருந்தால், அவருக்கு 2 காய்கள் வரும் சந்தர்ப்பத்தில், நீங்கள் Queen ஐ நேரடியாக அடித்து வெளியே எடுத்து கொடுக்க வேண்டும்.அப்படி நீங்கள் அடிக்கும் போது Queen க்கு படவில்லை என்றால்,தண்டமாக உங்களது ஒரு காய் வைக்கப்படும். அத்துடன், உங்களது காயால் கரம் பண்ணியும் Queen ஐ எடுக்கலாம், ஆனால் அச்சந்தர்பத்தில் Queen வெளியில் வரவில்லை என்றால் அதற்கு தண்டமாக உங்களது ஒரு காய் வைக்கப்படும்.
27🔵 எதிராளியின் காயை நீங்கள் அவரின் மட்டைக்கு கொண்டு சென்றால், உங்களது ஆட்டம் வரும்போது, முதலில் அவரின் காயை வெளியே எடுத்து கொடுத்த பின்னர் தான் உங்கள் காய்களைப் போட்டு விளையாட முடியும்.அதற்கு முன் உங்கள் காய்கள் ஏதேனும் விழுந்தால், அக்காயை மேலே எடுத்து வைப்போம்.(விளங்கவில்லை என்றால்,விரிவான விளக்கம் நேரே கொடுப்போம்)
28⚫உங்களுக்கும் 2 காய்கள்,எதிராளிக்கும் 2 காய்கள் இருக்கும் சந்தர்ப்பத்தில், உங்களது மட்டையில் Queen நின்றால் (நீங்கள் அதைக்கொண்டு போய் இருக்கும் பட்சத்தில்) நீங்கள் Queen ஜ மட்டும் தான் கண்டிப்பாக விளையாட வேண்டும். (உங்களது எதிராளி கொண்டு சென்றிருந்தால், நீங்கள் கண்டிப்பாக விளையாட வேண்டும் என்பது அவசியமில்லை) அதாவது, நீங்கள் நேரடியாக Queen ஐ அடித்து விளையாட வேண்டும்.நேரடியாக அடிக்கும் போது Queen வெளியில் வரவேண்டும் என்பது அவசியம் இல்லை, ஆனால் கண்டிப்பாக Queen இல் படவேண்டும்.அல்லது உங்களது காயால் கரம் பண்ணலாம்,
அச் சந்தர்பத்தில் Queen கண்டிப்பாக pocket இற்குள் விழவேண்டும் அல்லது board இற்குள் வரவேண்டும். (சம நேரத்தில் கரம் பண்ணும் போது, Queen வெளியில் வராமல் உங்களது காய் மட்டும் ஏதாவது விழுந்தால்,உங்களது விழுந்த காயும் எடுத்து வைத்து தண்டமாக 1 காயும் வைக்கப்படும்) இந்த 2 இல் ஏதேனும் ஒன்று நடக்கவில்லை என்றால் அதற்கு தண்டமாக உங்களது ஒரு காய் வைக்கப்படும்.
29🟠Queen Pocket பண்ணும்போது,diskக்கும் சேர்ந்து pocket பண்ணப்பட்டால் குற்றமாகும்,அத்துடன் disk எந்த சந்தர்ப்பத்தில் விழுந்தாலும் குற்றமாகும்.
30🟡 எச்சந்தர்ப்பத்திலும், disk/காயோ உங்கள் கையில் படும்பட்சத்தில் குற்றமாக கருதப்படும்.
31🔴தண்டனைக்குரிய காய்கள் வைக்கப்படும் போது, எச்சந்தர்ப்பத்திலும் ஒன்றுடன் ஒன்று உரசிக்கொண்டு இருக்க கூடாது. இதுவும் ஒரு தண்டனைக்குரிய செயலாகும்.
32🔴எதிராளியின் கடைசிக்காய்க்கு நீங்கள் நேரடியாக அடிக்க முடியாது. அப்படி அடிக்கும் செயலை கண்டிக்கும் விதமாக, அதற்கு தண்டனையாக, இரு காய்கள் வைக்கப்படும்.⛔
33🔵எதிராளியின் கடைசிக் காயை நீங்கள் அவரின் மட்டைக்குள் கொண்டு சென்றால், அக்காயை நீங்கள் நேரே அடித்து எடுத்துக்கொடுக்கலாம்.
❌மேலே குறிப்பிட்ட அனைத்து குற்றங்களுக்கும் தண்டமாக காய்/காய்கள் எடுத்துவைக்கப்பட்டு,நீங்கள் தொடர்ந்து விளையாடும் சந்தர்ப்பம் பறிக்கப்பட்டு,எதிராளிக்கு விளையாடும் சந்தர்ப்பம் வழங்கப்படும்.❌
🟪மேற்குறிப்பிட்ட விதிகளுக்கு அமைவாக,எமது ஒற்றையர்சுற்று நடாத்தப்படும். எமக்கு எதிராக விளையாடும் வீரர் அடித்ததில் தவறு இருப்பதாக உணரும் பட்சத்தில் நடுவர்வர்களிடம் முறையிடலாம். ஆனால்,நடுவரால் எடுக்கப்படும் தீர்ப்பே இறுதியானதும், உறுதியானதும். அத்தீர்ப்பில் உங்களுக்கு திருப்தி இல்லை என்று கருதினால் மட்டும்,எமது நடத்துனர்களிடம் கேட்கலாம்.அவர்கள் நடுவர்களுடன் கலந்து ஆலோசித்து என்ன முடிவு செய்துள்ளார்களோ,அதுவே உங்களுக்கான இறுதித்தீர்ப்பாகும்.
🟦இப்போட்டியை நடத்துவதற்க்காக, எமது இரு உறுப்பினர்களை நாம் நியமித்துள்ளோம். இப்போட்டியினை, உங்களது முழு ஒத்துளைப்புடனும், நேர்மையுடனும்,மனசுத்தியுடனும் நியாயமான தீர்ப்புகளை வழங்கி நடாத்துவார்கள்.
✅மேற்குறிப்பட விதிமுறைகளில், உங்களுக்கு ஏதேனும் தெளிவின்மை/சந்தேகம் ஏதேனும் இருப்பின், நடத்துபவர்கள்/மேற்பார்வையாளர்களை அனுகி, சந்தேகத்தை சரி செய்தபின்னர் விளையாடவும்.
🟩மேற்குறிப்பிட்ட விதிகள் அனைத்தையும் கருத்திற்கொண்டு, முழுமனதோடு விதிமுறைகளைக்கடைப்பிடித்து, இவ் ஒற்றையர் சுற்றுப்போட்டியை நல்லவிதமாக நடாத்தி முடிப்பதற்கு உங்கள் அனைவரையும் ஒத்துளைப்பு தரும்படி மிகவும் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கின்றோம்.
நன்றி🙏
றக்பி தமிழ் கிங்ஸ் ஸ்போர்ட்ஸ் கிளப்
15/08/2025
சுண்டாட்டம் விளையாடும் வீரர்களுக்கு வணக்கம்🙏
🛑 ஒற்றையர் கரம் போட்டி விதிமுறைகள் 🛑
தயாரிப்பு:- தமிழ் சுண்டாட்ட ஒன்றியம் பிரித்தானியா
🛑வெற்றி,தோல்வி இரண்டையும் சமமாகப் பார்க்கவும்🛑
Join
Participate in our exciting sports events today!
Events
enquiries@rtksportsclub.com
+443330112377
Company Registration Number : 15743103 / England & Wales
Welfare CIC Company Number : 11230437
© 2024 rtksportsclub.com
All Rights Reserved
Developed and Maintained by Lakshmi Sellerss
For regular Updates